Tuesday 7th of May 2024 05:40:17 AM GMT

LANGUAGE - TAMIL
பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க நேரில் களமிறங்குகின்றது அரச குழு!

பகிடிவதை சம்பவங்களை விசாரிக்க நேரில் களமிறங்குகின்றது அரச குழு!


பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை சம்பவங்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குழு பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைக் கேட்டறியும் அமர்வுகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

பகிடிவதைகளைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆராயும் வகையில் அந்தக் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் சந்திப்பை நடத்தியுள்ளது.

இதன்போது பகிடிவதைகளைத் தடுப்பதற்குப் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்போது உப வேந்தர்கள் எதிர்நோக்கக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாணவர்களுக்கு ஆங்கிலத்தையும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தையும் கட்டாயமாக்க வேண்டும் என்றும், மாணவர்கள் சுயகல்வியை மேம்படுத்துவதற்கு அவர்கள் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சந்திப்பில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான 7 பேர் கொண்ட அந்தக் குழுவில் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் தாரக வர்ணசூரிய , பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜனிதா வியனகே, வண.மாகம்மன பிரக்ஞா ஞானந்த தேரர், வண.பிதா கலாநிதி பெண்ட் ஷாந்த பெர்னாண்டோ , முன்னாள் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக உபவேந்தர் சந்திரா எம்புல் தெனிய ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE